இடுகைகள்

ஜனவரி 19, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேவாங்கர்களின் திருமணம் மற்றும் பண்டிகை சடங்குகளும்,தத்துவங்களும்

தேவாங்கர் விவாக கிரியைகள் வேண்டுகோள் :- தேவாங்கர் என்னும் சொல் தெய்வத் தன்மையை இயற்கையாக உடையவர் என்றும், பரப்பிருமத்தின் நேரடி வம்சாவழியினர் என்றும் பொருள்படும். நீரில் பல உயிரினங்களும், தாவரங்களும் தோன்றுகின்றன இருப்பினும் நீரில் தோன்றுவது என்னும் பொருள் தாமரை ஒன்றனையே குறிக்கும். இனி, பூ என்னும் பெயரும் தாமரை ஒன்றனையே குறிக்கும். மற்றப் பூக்களை மல்லிகைப்பூ, இருவாட்சிப்பூ என விதந்து கூற வேண்டும். ஆன்றோர்கள் “ பூ எனப்படுவது பொறிவாழ் பூவே“ என அறுதியிட்டுக் கூறினர். தெய்வத் தன்மை “தேவாம்சம்“ கொண்ட குலங்கள் பல இருக்கின்றன. இருப்பினும் “தேவாங்கர் என்னும் பெயர் மற்ற குலங்களைக் குறிக்காமல் தேவாங்க குலத்தை மட்டும் குறிக்கின்றது. ஒருகாலத்தில் தேவாங்க குல மக்கள் சிறந்த வைதிக நெறி முறைப்படி வாழ்ந்தனர். கால வேறுபாடுகளினாலும், அறியாமையாலும் இன்று தம் நெறி முறைகளைச் சிறிது சிறிதாக மறந்து வருகின்றனர். பிறப்பு முதல் இறப்புவரை பதினாறு விதமான வைதிகச் சடங்குகளைத் தேவாங்கர் தம் வாழ்வில் நடத்துகின்றனர். இவை “சோடஷ கர்மாக்கள்“ எனப்படும். இப்பதினாறில் திருமணம் ஒன்று. தேவாங்கரின் திருமண கிரியைக